தஞ்சாவூர், ஆக. 7: தஞ்சாவூர் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர் கூட்டம் (8ம் தேதி) கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடக்கிறது. தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர் கூட்டம் (8.8.2024) நாளை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களுடைய வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம். இத்தகவலை, தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
The post சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர் கூட்டம் நாளை நடக்கிறது appeared first on Dinakaran.