இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 598 கோரிக்கை மனுக்கள் பெற்றப்பட்டு, அவை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் பரிந்துரை செய்தார். இதனையடுத்து தூய்மைப்பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினருக்கான அடையாள அட்டைகள், கலை பண்பாட்டுத்துறை சார்பில் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர்கள் 2 பேருக்கு ரூ.1000 மதிப்பிலான மூக்குக் கண்ணாடிகளும், 10 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவி உட்பட மொத்தம் 24 பயனாளிகளுக்கு ரூ.1.47 லட்சம் மதிப்பிலான நிதியுதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். கூட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.1.47 லட்சம் நிதியுதவி: காஞ்சி கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.