இதை வைத்துகொண்டு பிரகாஷ் (28) என்பவருக்கு 21.1.2024ல் பொது அதிகாரம் கொடுத்து நிலத்தை செஞ்சம்மாள் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.. எனவே, போலியான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ் மூலம் எனது நிலத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக அப்துல் ரஹ்மான், அவரது மனைவி ஹசீனா மற்றும் விஜயகுமார் ஆகியோர் கடந்த மே மாதம் 18ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் கைதான விஜயகுமார், இதேபோன்று, ஷீலா அப்பாவு என்பவருக்குச் சொந்தமான அம்பத்தூர் பட்டரவாக்கம் ஞானமூர்த்தி நகரில் உள்ள 2790 சதுர அடி நிலம் விற்பனைக்கு இருப்பதாக கூறி கோவிந்தராஜ் என்பவரிடம் ரூ.65,00,000 பெற்றுகொண்டு, ஷீலா அப்பாவு போன்று வேறு ஒரு பெண்ணை ஆள்மாறாட்டம் செய்தும், போலி ஆவணம் தயாரித்தும் விற்பனை செய்துள்ளார். இதில், அம்பத்தூர் புதூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (47) மீது பல நில மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க ஆவடி காவல் ஆணையர் சங்கரிடம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி நேற்றுமுன்தினம் விஜயகுமார் குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
The post பல்வேறு நிலமோசடியில் ஈடுபட்டவர் குண்டாசில் அடைப்பு appeared first on Dinakaran.