கரூர், ஆக. 3: கரூர் மாவட்டத்தில் கரூர் மண்டலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கணினிமயமாக்கல் தொடர்பான ERP பயிற்சி அளிக்கப்பட்டது. கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா தலைமை வகித்தார்.
பயிற்சியில் துணைப் பதிவாளர்கள் பிச்சைவேலு, ஆறுமுகம், திருமதி, கள அலுவலர்கள், கூட்டுறவு சார் பதிவாளர்கள், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொதுமேலாளர் முருகன் ,கள மேலாளர்கள் ,சரக மேற்பார்வையாளர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள், கணினி பயிற்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.