மலைவாழ் மக்களின் துயர் துடைக்க பச்சைமலை குதிரை பாதையில் தார்சாலை அமைக்க வேண்டும்

பெரம்பலூர், ஆக.2: மலை வாழ் மக்களின் துயர் துடைக்க பச்சைமலையிலுள்ள குதிரைப் பாதை யை சீரமைத்து, தார்சாலை யாக்க வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட் டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கோரிக்கை மனு அளித்தார். பெரம்பலூர் மதரஸா சாலையிலுள்ள சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலகத்தில், குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவு ரையாளர்கள், மணிநேர விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், தங்களின் 8மாத சம் பளத்தொகை நிலுவை உள் ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிர பாகரனிடம் கொடுத்தனர். உடனடியாக அந்தக் கோரி க்கை மனுவை, திருச்சிக்கு வருகை தந்த திமுக இளை ஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலினி டம், பெரம்பலூர் சட்டமன்ற த்தொகுதி உறுப்பினர் பிர பாகரன் வழங்கினார்.

அந்த கோரிக்கை மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது : முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கடந்த 2006 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 21 கௌரவ விரிவுரையாளர்கள், 13 மணிநேர விரிவுரையாளர் கள், 9அலுவலகப் பணியா ளர்கள் என மொத்தம் 43 பேர்களுக்கு கடந்த 8 மாதங் களாக ஊதியம் வழங்கப் படவில்லை. மேலும் இளங் கலையில் தமிழ், வரலாறு, சமூகப் பணி, சுற்றுலா மேலாண்மை, நுண்ணுயி ரியல், கணினி பயன்பாட்டி யல் பட்டவகுப்புகள் மற்றும் 4 முதுகலை பட்ட வகுப்புக ளுக்கு அரசாணை விடுபட் டதால் இதில் பணியாற்றக் கூடிய விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வில்லை. எனவே 8 மாத நிலுவையில் உள்ள ஊதிய ங்களை வழங்க ஏற்பாடு செய்து, விடுபட்ட பாடப்பிரி வுகளுக்கு அரசாணை வழ ங்கப்பட வேண்டும்.

மேலும் பெரம்பலூர் மாவ ட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, மலையாளப்பட்டி ஊராட்சியில், மலையாள பட்டி, கொட்டாரக் குன்று, பூமிதானம், சின்ன முட்லு, புதூர் ஆகிய ஐந்து கிராமங்களிலும், தொண்ட மாந்துறை ஊராட்சியில் கோரையாறு என்னும் ஒரு கிராமமும் என 6 கிராமங் களில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மலைவாழ் சமு தாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் சொந்தங்கள் அனைவரும் பச்சைமலையின் மேலுள்ள கிராமங்களில் உள்ளனர். ஏதாவது ஒரு நல்லது கெட் டது என்றால் 100 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு துறையூர் சென்று பச்சை மலை செல்ல வேண்டி உள் ளது.

எனவே இந்த மலை வாழ் மக்களின் துயர் துடைக்க மலையாள பட்டி முதல் டாப் செங்காட்டுப் பட்டி வரை (7 கிலோ மீட்டர் தூரம்) உள்ள குதிரைப் பாதையை சீரமைத்து, தார் சாலையாக அமைத்து மலைவாழ்மக்களின் பயன் பாட்டிற்குக் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என் கிற கோரிக்கை மனுக் களை அளித்தார். அதனை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் பெற்றுக் கொண்டு, பரிசீலனைசெய்து நடவடி க்கை எடுப்பதாக தெரிவித் தார்.அப்போது பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் உடனிருந்தார்.

The post மலைவாழ் மக்களின் துயர் துடைக்க பச்சைமலை குதிரை பாதையில் தார்சாலை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: