ஒலிம்பிக் ஹாக்கியில் இன்று இந்தியா – பெல்ஜியம் மோதல்

பாரிஸ்: ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, நடப்பு சாம்பியன் பெல்ஜியத்துடன் இன்று மோதுகிறது. ஒலிம்பிக் ஹாக்கியில் அதிக தங்கம் வென்ற அணியாக இந்தியா திகழ்கிறது. இருப்பினும் 1980க்கு பிறகு ஹாக்கியில் சரிவை சந்தித்த இந்தியா, 2020 டோக்கியா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இழந்த பெருமையை ஓரளவு மீட்டது. பாரிசில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் களம் கண்டுள்ள இந்தியா, இம்முறையும் பதக்கத்தை முத்தமிட்டாக வேண்டும் என்ற முனைப்போடு விளையாடி வருகிறது.

பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களில் நியூசிலாந்து, அயர்லாந்து அணிகளை வீழ்த்தியும், அர்ஜென்டினா அணியுடன் டிராவும் செய்துள்ளது. 7 புள்ளிகள பெற்றுள்ள இந்தியா புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. மொத்தம் 6 அணிகளில் இருந்து 4 அணிகள் காலிறுதிக்கு முன்னேற உள்ளன. கடைசி 2 இடங்களில் இருக்கும் நியூசிலாந்து, அயர்லாந்து அணிகள் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறவில்லை. எஞ்சிய 2 ஆட்டங்களில் வென்றாலும் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இல்லை.

எனவே மற்ற 4 அணிகளான நடப்பு சாம்பியன் பெல்ஜியம், இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா அணிகள் இந்த பிரிவில் காலிறுதியை உறுதி செய்து விட்டன. இந்நிலையில், இந்தியா தனது 4வது ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் வலுவான பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. நாளை ஆஸ்திரலேியாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டங்களின் முடிவுகள் எப்படி இருந்தாலும் இந்தியா காலிறுதியில் விளையாடப் போவது உறுதி. இருப்பினும் பி பிரிவில் முதல் 2 இடங்களில் ஒன்றை பிடித்தால் ஏ பிரிவில் உள்ள சுமாரான அணியுடன் மோதும் வாய்ப்பு கிடைக்கலாம்.

The post ஒலிம்பிக் ஹாக்கியில் இன்று இந்தியா – பெல்ஜியம் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: