வேப்பூர் அரசு கல்லூரியில் ஆக. 8ம் தேதி வரை மாணவிகள் சேர்க்கை நீட்டிப்பு

 

குன்னம், ஜூலை 31: குன்னம் அடுத்த வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவிகள் சேர்க்கை ஆகஸ்ட் 08 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குன்னம் அடுத்த வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பாடப்பிரிவுகளான பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.பி.ஏ.(வணிக நிர்வாகவியல்), பி.காம். (வணிகவியல்), பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. இயற்பியல், பி.எஸ்சி. வேதியியல் மற்றும் பி.எஸ்சி.

கணிணி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு காலியாக உள்ள இடங்களுக்கு மாணவிகள் சேர்க்கை பெற வரும் 8ம் தேதி வரை நடைபெறும். மேலும் சேர்க்கைக்கு வரும்போது 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (3 நகல்), 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (3 நகல்), மாற்று சான்றிதழ் (3 நகல்), ஆதார் அட்டை (3 நகல்), வங்கி புத்தகத்தின் முதல் பக்கம் (3 நகல்), சாதிச் சான்றிதழ் (3 நகல்), விண்ணப்பம் பதிவு செய்துள்ள தரவுத்தாள் (3 நகல்) மேற்கண்ட ஆவணங்களுனட் மாணவிகள் வந்து சேர்ந்துகொள்ளலாம். இவ்வாறு, கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post வேப்பூர் அரசு கல்லூரியில் ஆக. 8ம் தேதி வரை மாணவிகள் சேர்க்கை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: