தோட்டக்கலை துறையை கண்டித்து உடுமலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

உடுமலை, ஜூலை 30: உடுமலையில் தோட்டக்கலை துறை சார்பில் நடைபெற்ற தென்னை சாகுபடி கருத்தரங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தேஜஸ் மகால் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்கத்தின் தென்னை விவசாயிகள் அணி மாநில செயலாளர் வேலு மந்திராச்சலம் தலைமை வகித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: தென்னை மரத்தை மிக கடுமையாக பாதித்து வரும் ஈரியோ பைட் நோய், கேரளா வாடல் நோய், குருத்து அழுகல் நோய்களை போக்க இதுவரை எவ்வித மருந்தையும் கண்டுபிடிக்காமல் உள்ளதால் விவசாயிகள் 15 ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால் தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி, கருத்தரங்கம் என்ற பெயரில் அரசின் பணத்தை தோட்டக்கலை துறை வீணடித்து வருகிறது. தமிழக ரேஷன் கடைகளில் மலேசியா பாமாயிலுக்கு பதிலாக நம் நாட்டு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர். தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு செய்து வரும் துரோகத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post தோட்டக்கலை துறையை கண்டித்து உடுமலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: