போடி, ஜூலை 29: போடி பகுதியில் மர வள்ளிக்கிழங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. போடி அருகே தேவாரம், சாக்குலத்து மெட்டு மலை அடிவாரம், மீனாட்சிபுரம், தம்மிநாயக்கன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் வருடம் ஒரு முறை மரவள்ளிக்கிழங்கு அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.இப்பகுதி வியாபாரிகள், கிழங்குகளை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் விளைச்சல் இல்லாத காலங்களில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கிராமப்புறப் பகுதிகளில் கரிசல் மண்ணில் விளைவித்து எடுக்கும் மரவள்ளிக் கிழங்குகளை கொண்டு வந்து இங்கு விற்பனை செய்தும் வருகின்றனர். இந்த வகையான கிழங்குகள் தனி சுவையாக இருப்பதால் தேனி மாவட்ட பொதுமக்கள் பெரிதும் விரும்பி வாங்குகின்றனர். நேற்று போடி வார சந்தையில் அதிகளவு இந்த வகையான மரவள்ளிக் கிழங்குகள் விற்பனையாகின. கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் பலரும் வாங்கிச் சென்றனர்.
The post போடியில் மரவள்ளி கிழங்கு விற்பனை அமோகம் appeared first on Dinakaran.