தேவாரம் பகுதிகளில் புகையிலை விற்பனையைத் தடுக்க கோரிக்கை

தேவாரம், ஜூலை 29: தேவாரம் பகுதிகளில் அதிகரித்து வரும் புகையிலை விற்பனையைத் தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போடி சப்டிவிசனில் அடங்கி உள்ள தேவாரம், கோம்பை, டி.மீனாட்சிபுரம், லட்சுமி நாயக்கன்பட்டி, என பல்வேறு பகுதிகளில் புகையிலை விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகே உள்ள இடங்களில் புகையிலை விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும் மதுபான கடைகளில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து, பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த போலீசார் தனிப்படை அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேவாரம் பகுதிகளில் புகையிலை விற்பனையைத் தடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: