பாகிஸ்தானுக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் பெற போலியான ஆவணம் பயன்படுத்திய பெண் கைது

புனே: பாகிஸ்தான் காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக, அந்நாட்டிற்கு செல்ல பாஸ்போர்ட் பெற போலியான ஆவணம் பயன்படுத்திய பெண்ணை புனே போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த சனம் கான் என்ற நக்மா நூர் மக்சூத் (23) என்பவர், பாகிஸ்தானுக்கு செல்வதற்கான பாஸ்போர்ட்டை பெறுவதற்காக போலியான ஆவணங்களை பயன்படுத்தி உள்ளார். இதுபற்றி தானே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவரை கடந்த வியாழக்கிழமை வர்தக் நகர் காவல் துறையினர் கைது செய்தனர். இதன்பின்னர் அவர் தானே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. இதுபற்றி சனம் கான் கூறுகையில், ‘கடந்த 2015ம் ஆண்டில் என்னுடைய பெயரை மாற்றினேன்.

2021ம் ஆண்டு கொரோனா காலத்தில், பஷீர் அகமது என்பவருடன் சமூக ஊடகம் வழியே தொடர்பு ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தோம். எங்களுடைய குடும்பத்தினர் வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால் வழியே ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டனர். கடந்த 2023ம் ஆண்டில் எனக்கு பாஸ்போர்ட் கிடைத்தது. விசாவுக்கு விண்ணப்பித்தேன். அனைத்து சட்ட ஆவணங்களையும் சமர்ப்பித்ததும் எனக்கு விசா கிடைத்தது. விசாரணை நடந்து விட்டால் அனைத்தும் முடிந்து விடும் என என்னிடம் கூறப்பட்டது. ஆனால், என்னால் காவல் நிலையத்திற்கு செல்ல முடியவில்லை. சட்ட முறையிலேயே நான் சென்றுள்ளேன் என்று நான் தெளிவுப்படுத்தி விட்டேன்’ என்றார். ஆனால் துணை காவல் ஆணையாளர் அமர் சிங் ஜாதவ் கூறும்போது, ‘இந்த விவகாரம் பற்றி தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்’ என கூறினார்.

The post பாகிஸ்தானுக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் பெற போலியான ஆவணம் பயன்படுத்திய பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: