கற்பித்தலில் புதுமை படைக்கும் திறமையான ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி உறுதி


புதுடெல்லி: ஆசிரியர் தினத்தையொட்டி, நாடு முழுவதும் 82 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது டெல்லியில் வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி நேற்று முன்தினம் கலந்துரையாடினார். அந்த வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. அதில் பிரதமர் மோடி பேசியிருப்பதாவது: இன்றைய மாணவர்களை வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கு தயார்படுத்தும் முக்கியமான பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. கல்விச் சுற்றுலா மூலம் மாணவர்கள் பல்வேறு விஷயங்களை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் நாடு முழுவதும் புகழ்பெற்ற 100 சுற்றுலா தலங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

மாணவர்களை அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். இவை அவர்களின் கனவுகளை தூண்டிவிடும். கடந்த ஆட்சிகளில் என்ன நடந்தது என்பதை பற்றி பேசவில்லை. ஆனால், கற்பித்தலில் புதுமை படைக்கும் திறமையான ஆசிரியர்கள் இந்த ஆட்சியில் அங்கீகரிக்கப்படுவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

The post கற்பித்தலில் புதுமை படைக்கும் திறமையான ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி உறுதி appeared first on Dinakaran.

Related Stories: