தீயநோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி, ஒடுக்கப்படுவர்: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

காஷ்மீர்: தீயநோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி, ஒடுக்கப்படுவர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 25வது ஆண்டு கார்கில் போர் வெற்றி தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு; கார்கில் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஷிங்குள் லா சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். 4.1 கி.மீ. நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையாக ஷிங்குன் லா சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. 15,800 அடி உயரத்தில் லே பகுதியை இணைக்கும் வகையில் ஷிங்குள் லா சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

இந்த நிகழச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி; கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த நமது வீரர்களுக்கு இந்த தேசம் தலைவணங்குகிறது. நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் கடன் பட்டிருக்கிறோம். இந்தியா மீதான தாக்குதல்களை மறைமுகமாக இன்றும் (பாகிஸ்தான்) தொடர்கிறது. தீயநோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி, ஒடுக்கப்படுவர். கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை. தீவிரவாதத்தை நம்முடைய வீரர்கள் முழு வலிமையோடு எதிர்ப்பார்கள்.

லடாக், காஷ்மீர் வளர்ச்சிக்கு எதிரான பிரச்சினைகளை இந்தியா தோற்கடிக்கும். பயங்கரவாதத்தின் ஒவ்வொரு முயற்சியையும் இந்தியா வீழ்த்தி, வெற்றி கண்டுள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர்; ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டம் லடாக்கின் வளர்ச்சியை மேம்படுத்தும். 370 பிரிவை நீக்கிய பின்னர் ஜம்மு-காஷ்மீர் பகுதி நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் லடாக்கின் பட்ஜெட்டை 6,000 கோடி ரூபாயாக உயர்த்தி உள்ளோம். லடாக் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒன்றிய அரசு தொடர்ந்து உழைத்து வருகிறது என்றும் கூறினார்.

The post தீயநோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி, ஒடுக்கப்படுவர்: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: