மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட திட்டங்கள் வல்லுநர்களால் புதுமை மற்றும் உண்மைத்தன்மையின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்கும் போது, சமூகப் பிரச்சினைகளுக்கான பயன்பாடு மற்றும் பொருந்தக்கூடிய தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மாணவர்களிடையே உள்ள அபரிமிதமான திறமைகள் நமது மாநிலத்தின் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அறிவியல் ரீதியாக தீர்வு காண பயன்படுத்தப்படுகிறது.
இந்த மாணவர் கண்டுபிடிப்புகள், வடிவமைப்பு, யோசனைகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டு மன்றத்தின் காப்புரிமை தகவல் மையம் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும். மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை சக மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழ்களில் வெளியிட ஊக்குவிக்கப்படுகிறார்கள். இத்திட்டம் மாணவர் சமுதாயத்தை அறிவியல் மனப்பான்மையை நோக்கித் தூண்டுகிறது. இந்த நிலையில் ஒப்புதல் பெறப்பட்ட 1010 மாணவர் ஆராய்ச்சி திட்டங்கள் மன்றத்தின் இணையதளத்தில் www.tanscst.tn.gov.in < //www.tanscst.tn.gov.in > பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
The post ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்க புதுமையான மாணவர் ஆராய்ச்சி திட்டத்தில் ரூ.10,000 நிதியுதவி: உயர்கல்வித் துறை தகவல் appeared first on Dinakaran.