இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மக்களின் வாழ்க்கை இனிமையாக அமைய வேண்டும் என்ற வேண்டுதலுடன் லட்டு பிள்ளையார் வழிபாட்டை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு 72 கிலோ எடையில் லட்டு பிள்ளையார் செய்துள்ளோம். 15 பேர் கொண்ட குழுவினர் 3 நாள்களாக இதை உருவாக்கினார். 30 கிலோ கடலை மாவு, 35 கிலோ சர்க்கரை, 20 கிலோ நெய், 3 கிலோ முந்திரி, 2 கிலோ திராட்சை, கால் கிலோ ஏலக்காய் ஆகிய பொருள்களை பயன்படுத்தி லட்டு பிள்ளையாரை உருவாக்கி உள்ளோம். 3 நாள்களுக்கு பிறகு லட்டு பிள்ளையார் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்றனர்.
The post கடலூரில் 72 கிலோ பிள்ளையார் லட்டு; 15 பேர் 3 நாட்களில் உருவாக்கினர்: பொதுமக்கள் வழிபாடு! appeared first on Dinakaran.