பாளையக்கோட்டை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 1,050 மனுக்கள்

 

மன்னார்குடி, ஜூலை 26: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியம் பாலையக்கோட்டை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை தலைம யில் நேற்று நடந்தது. உதவி திட்ட அலுவலர் சௌந்தரராஜன், மாவட்ட கவுன்சிலர்கள் கலைவாணி மோகன், மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக்குழு தலைவர் தலைய மங்கலம் பாலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திட்ட த்தை துவக்கி வைத்து பேசினார்.

முகாமில், தென்பரை, பாளையக்கோட்டை, திருமக்கோட்டை, வல்லூர், பா லையூர், குறிச்சி, எளவனூர், மேல நத்தம், ராதாநரசிம்மபுரம் ஆகிய 9 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் கலந்து கோண்டு தங்களின் பல்வேறு கோரிக் கைகள் அடங்கிய 1,050 மனுக்களை கொடுத்தனர். அவற்றை 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பெற்றுக் கொண்டு 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலு வலர்கள் அன்பழகன் வரவேற்றார். பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.

The post பாளையக்கோட்டை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 1,050 மனுக்கள் appeared first on Dinakaran.

Related Stories: