கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மண்டியா: கே.ஆர்.எஸ். அணையில் கூடுதல் நீர் திறப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே அமைந்துள்ளது கிருஷ்ணராஜசாகர் அணை( கே.ஆர்.எஸ்.). இந்த அணை காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது. இந்த அணை தான் கர்நாடகா, தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்குகிறது.கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால், அணை நிரம்பவில்லை. நடப்பாண்டு ஜூன் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டியது. கே.ஆர்.எஸ். தனது முழு கொள்ளளவான 124.80 அடியை எட்டி முழுமையாக நிரம்பியது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு கே.ஆர்.எஸ். அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு வரும் 38,500 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 50,000 கன அடி முதல் 80,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: