இந்தியாவின் மிகப்பெரிய பேட்டரி ஆலையை கிருஷ்ணகிரியில் அமைக்க உள்ளது LOHUM நிறுவனம்!!

கிருஷ்ணகிரி : இந்தியாவின் பிரபல பேட்டரி நிறுவனமான LOHUM கிருஷ்ணகிரியில் ரூ.2000 கோடி முதலீட்டில் புதிய ஆலை ஒன்றை அமைக்கிறது. இதற்கான பணிகள் 2 மாதங்களில் தொடங்க உள்ளன. கிரேட்டர் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் LOHUM நிறுவனம், குஜராத், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற இடங்களில் கிளைகளை பரப்பி பேட்டரிகளுக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனம் கிருஷ்ணகிரி அருகே மாந்தூரில் புதிய ஆலை ஒன்றை அமைக்கிறது. சுமார் 65 ஏக்கரில் அமையும் இந்த ஆலையில், 6 ஆண்டுகளில் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்து பேட்டரி மூலப்பொருட்களை தயாரிக்க உள்ளது.

புதிய ஆலைக்கான கட்டுமான பணிகள் அடுத்த 2 மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், அடுத்த 18 மாதங்களில் உற்பத்தி தொடங்கிவிடும் என்று LOHUM நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் மூலப்பொருட்களை அமர ராஜா, ஓலா, டிவிஎஸ், எக்சைட் போன்ற பேட்டரி ஆலைகளுக்கு வழங்கவும் இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் தொழில் செய்ய மாநில அரசு உறுதுணையாக இருப்பதால், இங்கு ஆலையை தொடங்க ஆர்வம் காட்டுவதாக அந்நிறுவனத்தின் அதிகாரி சச்சின் மகேஸ்வரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

The post இந்தியாவின் மிகப்பெரிய பேட்டரி ஆலையை கிருஷ்ணகிரியில் அமைக்க உள்ளது LOHUM நிறுவனம்!! appeared first on Dinakaran.

Related Stories: