மேட்டு மருதூர் பகவதி அம்மன் கோயில் திருவிழா

 

குளித்தலை, ஜூலை 22: குளித்தலை அருகே மேட்டுமருதூர் கிராம் குடித்தெருவில் பகவதி அம்மன், ஒல்லி வெட்டி கருப்பு, சங்கிலிக் கருப்பு, மலையாள சுவாமி ஆகிய தெய்வங்கள் கொண்ட கோயில் திருவிழா நிகழ்ச்சி 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியான நேற்று காலை செல்லாண்டி அம்மனுக்கு கிடா வெட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மருதூர் காவிரி ஆற்றில் புனித நீராடி தீர்த்த குடம் எடுத்து கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.

பிறகு கோயிலை சுற்றி வந்து பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தங்களை அம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர். மாலை 6 மணி அளவில் கரகம் பாலிக்க ஆற்றுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், நாளை சந்தன காப்பு அலங்காரம் அபிஷேகம் திருமாவிளக்கு அழைத்தல், கரகம் ஆற்றுக்கு எடுத்து செல்லுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டுதலுடன் விழா முடிவடைகிறது. விழாக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

The post மேட்டு மருதூர் பகவதி அம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: