2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஒருங்கிணைப்புக் குழுவில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வே.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோர் உள்ளனர்.

மேலும் வெளியான அறிக்கையில்; “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது.

அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் அமைப்பு ரீதியான சீரமைப்புகளை – கழகத் தலைவருக்கும் தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒருங்கிணைப்புக்குழு பின்வருமாறு அமைக்கப்படுகிறது.

* கே.என்.நேரு
* ஆர்.எஸ்.பாரதி
* எ.வ.வேலு
* தங்கம் தென்னரசு
* உதயநிதி ஸ்டாலின்

The post 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: