ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் நாடுகளை வரவேற்போம்: அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பு

நியூயார்க்: ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் நாடுகளை வரவேற்போம் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் நீடித்து வருகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த சண்டை நடந்து வருகிறது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவிகள் செய்து வருகின்றன. அமெரிக்காவும் உதவி வருகிறது. இதனால் ரஷ்யாவிடம், சண்டையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இந்த நாடுகளால் பேச முடியவில்லை.

ரஷ்யாவுடன் சீனா இணக்கமாக உள்ளது. இருந்தபோதிலும் பேச்சுவார்த்தை என வரும்போது விலகி நிற்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு நட்பு நாடாக இந்தியா விளங்குகிறது. சமீபத்தில் ரஷ்யாவிற்கு சென்ற பிரதமர் மோடி, உக்ரைனுக்கும் சென்றார். இதனால் உக்ரைன்- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் முடியும் என உலக நாடுகள் நம்புகின்றன. இந்நிலையில் ரஷ்யா, உக்ரைன், போலந்து சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். இதையடுத்து பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலிபோனில் பேசினார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு தகவல் தொடர்பு ஆலோசகர் ஜான் கெர்பியிடம், ‘இந்தியாவால் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்’ என நினைத்து ஜோ பைடன் போன் செய்தாரா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜான் கெர்பி, ‘ஜெலென்ஸ்கியின் சிறப்புரிமைகள், உக்ரைன் மக்களின் சிறப்புரிமைகள், நியாயமான அமைதிக்கான அவரது (ஜெலன்ஸ்கி) திட்டத்திற்கு இணங்க, இந்த போரை முடிவுக்கு கொண்டு வர உதவுவதற்கு எந்த நாடும் தயாராக இருந்தால், அத்தகைய பங்கை நாங்கள் நிச்சயமாக வரவேற்போம். இந்திய முக்கிய பங்கு வகிக்கும் என நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்’ என்றார்.

The post ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் நாடுகளை வரவேற்போம்: அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: