கடலூரில் 3 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்: 2 இளைஞர்களிடம் தீவிர விசாரணை

கடலூர்: கடலூரில் 3 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம் காராமணிகுப்பம் சீத்தாராம் நகரில் 15.7.24 தேதி அன்று காலை பூட்டிய வீட்டில் நெருப்பு புகை வருவதாக தகவல் கிடைத்தவுடன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பழனி, நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவயிடம் உடனடியாக சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதில்,

1. கமலேஸ்வரி வயது 60, க/பெ சுரேஷ்குமார், 2 சுதன்குமார் வயது 40 த/பெ சுரேஷ்குமார் 3. நிஷாந்த் வயது 10, ஆகியோர் கத்தியால் வெட்டப்பட்டு, எரிந்த நிலையில் இருந்ததை கண்டு காவல்துறை தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டது.

இது சம்பந்தமாக நெல்லிக்குப்பம் காவல் நிலைய குற்ற எண்: 334/2024, பிரிவுகள் 1031) BNS படி வழக்கு பதிவு செய்யப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரனின் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தீவிர புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் 1 சங்கர்ஆனந்த் வயது 21. த/பெ பழனி, சீத்தாராம் நகர், காராமணிக்குப்பம், 2. ஷாகுல் அமீது வயது 20. த/பெ முகமது அலி. சீத்தாராம் நகர், காராமணிக்குப்பம் ஆகிய 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

The post கடலூரில் 3 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்: 2 இளைஞர்களிடம் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: