ஈரோடு,ஜூலை19: அரசு அருங்காட்சியகத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி சிறப்புக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், முதுமக்கள் தாழிகள் சிறப்பு கண்காட்சி நேற்று தொடங்கியது. காப்பாட்சியர் ஜென்சி தலைமை வகித்தார். சித்தார்த்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெயபாரதி கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
இதில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைக்கப் பெற்ற முதுமக்கள் தாழிகள் குறித்து புகைப்படங்கள், விளக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் பெத்தம்பாளையம், அய்யம்பள்ளி, சோலார், அந்தியூர் போன்ற பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில், சோலாரில் கண்டெடுக்கப்பட்டுள்ள 2,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி வரும் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.
The post அரசு அருங்காட்சியகத்தில் முதுமக்கள் தாழி சிறப்பு கண்காட்சி appeared first on Dinakaran.