தி சென்னை சில்க்ஸ் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1 கோடி கல்வி உதவித்தொகை

சென்னை: தி சென்னை சில்க்ஸ் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் 4,971 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை, எஸ்சிஎம் கார்மெண்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், அரசு பள்ளி மற்றும் பட்டய படிப்பு, பட்டப் படிப்பு பயிலும் 4,971 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 22,500 கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, அவிநாசிலிங்கம் பாளையத்தில் உள்ள மணிமண்டபத்தில் நடந்தது.

இதில், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பவனார் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி, கல்வியின் சிறப்பு குறித்து பேசினார். நிகழ்ச்சியில், எஸ்சிஎம் குழும தலைவர் டி.கே.சந்திரன், நிர்வாக இயக்குனர்கள் கே.பரஞ்சோதி, கே.விநாயகம், என்.கே.நந்தகோபால், பி.பி.கே.பரமசிவம் மற்றும் முதன்மை மார்க்கெட்டிங் அதிகாரி அருள் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

The post தி சென்னை சில்க்ஸ் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1 கோடி கல்வி உதவித்தொகை appeared first on Dinakaran.

Related Stories: