மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் அதிரடி கைது

 

தவளக்குப்பம், ஜூலை 17: புதுச்சேரி தவளக்குப்பம் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க எஸ்ஐ சண்முகசத்தியா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தானம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் 3 பேர் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்து சோதனையிட்டதில் கஞ்சாவை மறைத்து வைத்து மாணவர்களுக்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில், கன்னியகோவில் ஆர்ஆர்.நகரை சேர்ந்த அண்ணாமலை (22), சொகர்ராம் (21), கொரவள்ளிமேடு முரளி (எ) முரளிதரன் (20) என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 210 கிராம் கஞ்சா, 3 செல்போன்கள், 3 பைக்குகள் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

The post மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: