நில அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வருவாய் வட்டாட்சியர் அலுவலக வாசலில் நாற்று கொட்டி போராட்டம்

மேல்மலையனூர், டிச. 27: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா தாழகுணம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது நிலத்தை அளவீடு செய்வதற்காக நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி ஒரு மாதம் ஆகிறது. இந்நிலையில் பலமுறை சர்வேயருக்கு நில அளவீடு செய்ய வருவதற்கு மனு கொடுத்தும் மனுவை நிராகரித்ததால் ஆத்திரமடைந்த விவசாயி ராஜேந்திரன் தன் நிலத்தில் நடவு செய்வதற்காக 4 நாட்களுக்கு முன்பு எடுத்து நாற்று நட முடியாமல் தவித்து வந்த நிலையில் விவசாயி நாற்றுகளை டிராக்டர் மூலம் ஏற்றி வந்து மேல்மலையனூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வாசலில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாட்சியர் வேலு, விவசாய ராஜேந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளை நிலத்துக்கு அளவீடு செய்ய வருவதாக உறுதியளித்ததன் பேரில் விவசாயி அங்கிருந்து நாற்றுகளை டிராக்டர் மூலம் மீண்டும் ஏற்றி சென்றார். வருவாய் வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் விவசாயி நாற்று கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: