கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 20-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: ஜூலை 16-ஐ குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க கோரிக்கை

கும்பகோணம்: தமிழ்நாட்டை உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் உருவப்படம் பள்ளி முன்பு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டன. படங்களுக்கு பெற்றோர்கள் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் விபத்தில் உயிரிழந்த குழந்தைகள் விரும்பி உண்ட தின்பண்டங்களை படத்திற்கு முன்பு வைத்து வழிபட்டனர்.

பள்ளி தீ விபித்து நடைபெற்ற ஜூலை 16ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அரசு அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் அப்போது வலியுறுத்தினர். மேலும் ஜூலை 16ஆம் தேதி கும்பகோணம் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கவேண்டும் என்றும் கூறி கோரிக்கை வைத்தனர். 2004 ஆம் ஆண்டு ஜூலை 16ம் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெரும் தொடக்கப்பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தன.

 

The post கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 20-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: ஜூலை 16-ஐ குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: