தா.பழூரில் அரசு உதவிபெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

 

தா.பழூர், ஜூலை 16: தா.பழூர் ஒன்றியம், நாயகனைப்பிரியாள் ஊராட்சி, கீழமிக்கேல்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் உதவி திட்ட அலுவலர்கள் ராஜ்குமார், கலைவாணன், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன் (வ ஊ), கீழமிக்கேல்பட்டி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்கு தந்தை விக்டர் பால்ராஜ், வட்டார கல்வி அலுவலர் சாந்தி ராணி,

தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் (சத்துணவு), நாயகனைப்பிரியாள் ஊராட்சி மன்ற தலைவர் ராசாராம், பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராமதுரை, பொருளாளர் நாகராஜன், ஒன்றிய துணை செயலாளர் இந்துமதி நடராஜன், மாவட்ட பிரதிநிதி கண்ணதாசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் கார்த்திகைகுமரன், சம்பந்தம், தா.பழூர் நகர செயலாளர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், பெற்றோர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

The post தா.பழூரில் அரசு உதவிபெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: