தமிழகத்தில் ஜவுளி துறைக்கு வலுசேர்க்க இந்திய தொழில் கூட்டமைப்பு- தைவான் ஜவுளி கூட்டமைப்பு ஆலோசனை

 

கோவை, ஜூலை 12: தமிழகத்தில் ஜவுளித்துறை மேம்பாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில், இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் தைவான் ஜவுளி கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் கோவையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தமிழக அரசின் கைத்தறி, கைவினை மற்றும் நெசவுத்துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், “தைவான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும், மின்சார சேமிப்பு, கார்பன் குறைப்பு, பொருள் மறுசுழற்சி மற்றும் பிளாஸ்டிக் குறைப்பு போன்ற உலகளாவிய இலக்குகளை நிறைவேற்றுவது மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இரு நாடுகளும் தன்னார்வ மேலாண்மை நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதில், பொது நோக்கங்களை பகிர்ந்து கொள்கின்றன. இந்த கூட்டு முயற்சி மூலம், பல புதுமையான நுட்பங்களை உருவாக்க முடியும்” என்றார். சிஐஐ தமிழ்நாடு டெக்டைக்ஸ் குழு கன்வீனர் ஜி.ஆர்.கோபிகுமார் பேசுகையில், ”தைவான்-இந்தியா கூட்டுறவு, ஜவுளித்துறையில் குறைந்த செலவுகளுடன் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளை வழங்கவல்லது. இது, இரு நாடுகளுக்கும் பயன்தரும்” என்றார்.

 

The post தமிழகத்தில் ஜவுளி துறைக்கு வலுசேர்க்க இந்திய தொழில் கூட்டமைப்பு- தைவான் ஜவுளி கூட்டமைப்பு ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: