மணியக்காரன்பாளையம் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

 

கோவை, செப். 4: கோவை மாநகர் மாவட்ட திமுக எல்லைக்கு உட்பட்ட, கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி, மணியக்காரன்பாளையம் பகுதி திமுக பொது உறுப்பினர் கூட்டம் கணபதி காவலர் குடியிருப்பு சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது. மணியகாரன்பாளையம் பகுதி திமுக செயலாளர் அஞ்சுகம் பழனியப்பன் தலைமை தாங்கினார். கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், ‘‘தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், மீண்டும் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைய அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில், மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், முன்னாள் மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் தவமணி பழனியப்பன், மரியராஜ், நிர்வாகிகள் தமிழ்மறை, ஆனந்தகுமார், கே.எம்.ரவி, ஆர்.தாமோதரன், ஆர்.புகழேந்தி, பி.குமார், சி.வி.தீபா, ஆர்.கே.சுரேஷ்குமார், சுந்தர்ராஜன், பன்னீர்செல்வம், பிரதீப் குமார், ராமச்சந்திரன், துரை பிரவீன்குமார், க.மணிகண்டன், கதிரவன், ஸ்டாலின் சம்பத், சாந்தகுமாரி, ஜானகி, ஜோதி, அன்னபூரணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

The post மணியக்காரன்பாளையம் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: