டெங்குவை கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்குமாறு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தல்

டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டெங்குவை கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்குமாறு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா வலியுறுத்தியுள்ளார். தேசிய சுகாதார இயக்கத்தின் முதல் செயற்குழு கூட்டம் ஒன்றிய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா தலைமையில் நேற்று(11-07-2023) நடைபெற்றது.

அப்போது பேசிய ஒன்றிய அமைச்சர், பருவமழையை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரிப்பதால், டெங்கு விழிப்புணர்வுக்கு 24 மணி நேரமும் செயல்படும் ஹெல்ப்லைன் எண்ணை உருவாக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார். நோய் பரவல் அதிகமாக பதிவாகும் மாநிலங்களில் தீவிர கவனம் செலுத்துமாறும், மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றவும் வலியுறுத்தினார். எய்ம்ஸ் மற்றும் அனைத்து ஒன்றிய அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு சிறப்பு வார்டுகளை உருவாக்கவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

‘ஒன் ஹெல்த்’ அணுகுமுறையை நிறுவனமயமாக்குவதன் மூலம் ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு மற்றும் தொற்றுநோய்க்கான தயார்நிலையை இந்தியா அடைய இந்த பணி உதவும் என ஒன்றிய அமைச்சர் கூறினார்.

The post டெங்குவை கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்குமாறு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: