தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்க அமித் ஷா உத்தரவு

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்க அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அமித் ஷா – நயினார் பேசியது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்க அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். வரும் ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் என்.டி.ஏ. கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மோடி தலைமையில் நடக்கும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை ஒரே மேடையில் அமர வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவிடம் அதிக தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்துமாறு பாஜக நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுரை வழங்கினார். அமித் ஷா மீண்டும் தமிழ்நாடு வரும்போது தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: