சட்டம் ஒழுங்கு உறுதியாக இருக்க வேண்டும்; குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று அளித்த பேட்டி: தமிழக காவல்துறையில் சில மாற்றங்களை கொண்டு வந்து இருகிறார்கள். சென்னை போலீஸ் கமிஷனராக அருண், கூடுதல் சட்ட ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் ஆசிர்வாதம் பொறுப்பெற்க உள்ளனர். இனிவரும் காலங்களில் அரசுக்கு எந்தவிதமான கெட்ட பெயரும் ஏற்படாமல் காவல்துறை தடுக்க வேண்டும். எல்லா விமான நிலையங்களில் கட்டிடங்கள் மோசமாக உள்ளது. கூரைகள் கிழே விழுகிறது. பாஜ தேர்தல் பத்திரம் மூலம் ஊழல், நிதி நிறுவனங்களை அபகரிப்பது, ஏழை எளிய மக்களை ஆசை வார்த்தைகள் கூறி டெபாசிட் என்ற முறையில் பணம் பெற்று ஏமாற்றுபவர்களுக்கு அடைக்கலம் தருகிறார்கள். இப்படி மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தான் பா.ஜ.கவின் சித்தாந்தம். நீதி, நியாயம், மக்கள் பிரச்சனை பற்றி பேசினால் அவர்களை அடக்குவது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும் பாஜவின் பொறுப்பில் இணைகிறார்கள்.

தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையாக உள்ளது. தமிழ்நாட்டை ஒரு போதும் விட்டு கொடுக்க முடியாது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பல கோணங்களில் விசாரணை நடத்த வேண்டும். ஆருத்ரா மோசடி பேச்சு கடந்த வாரம் முதல் அதிகரித்து உள்ள நிலையில் படுகொலை சம்பவம் அரங்கேறி உள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இன்னும் உறுதியாக இருக்க வேண்டும். குற்றவாளிகளை இன்னும் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். போதைப் பொருளை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, சென்னை மாகாண முன்னாள் முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் பிறந்தநாளையொட்டி, அவரது படத்திற்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் எம்.பி., காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் எஸ்.ஏ.வாசு, தளபதி பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சட்டம் ஒழுங்கு உறுதியாக இருக்க வேண்டும்; குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: