மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கட்சி வலுவாக இருக்கும் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது கவலை தருவதாக கட்சியின் மத்திய குழு தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழுவானது 18வது மக்களவை தேர்தல் தொடர்பாக அறிக்கையை டெல்லியில் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் வெளியிட்டது. இந்த அறிக்கையில், ‘’நீண்ட ஆண்டுகளுக்கு முன் குறிப்பிடப்பட்ட நமது வெகுஜன அடித்தளத்தின் பாதிப்பு தொடர்கிறது என்பது தெளிவாகிறது. கட்சி பலமாக உள்ள மாநிலங்களில் கூட வெகுஜன மற்றும் தேர்தல் அடித்தளம் சிதைந்து வருவது கவலைக்குரியது.

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜவின் வாக்கு சதவீதம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் இடதுசாரிகளின் வாக்கு சதவீதம் 40.2சதவீதத்தில் இருந்து 33.35 சதவீதமாக குறைந்துள்ளது. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கும், மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்ததற்கும் குறிப்பாக சிறுபான்மையின மக்கள் மத்தியில் பாஜவை தோற்கடிக்க வேண்டும் என்ற இந்தியா அணியை வழிநடத்தும் காங்கிரஸ் கட்சியால் சாத்தியமாகியுள்ளது. 2019ம் ஆண்டு தேர்தலில் வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிட்டபோதும் இதே நிலை தான் காணப்பட்டது. கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் பல தொகுதிகளில் நமது பாரம்பரிய அடித்தளம் சிதைந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: