வைகை தண்ணீர் கள்ளந்திரி வந்தது

 

மதுரை, ஜூலை 5: மதுரை மாவட்ட முதல் போக விவசாயத்திற்கு வைகை அணையிலிருந்து நேற்று முன்தினம் திறந்து விடப்பட்ட தண்ணீர், கள்ளந்திரியை நேற்று மாலை வந்தடைந்தது. அப்போது நீர்வள பொதுப்பணி துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர், கள்ளந்திரி பெரியாறு நீர்பாசன விவசாய சங்க தலைவர் சுந்தர் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். தொடர்ந்து கால்வாயில் வந்த தண்ணீரை, மடைகளில் பூஜைகள் நடத்திய பின் திறக்கப்பட்டன.

9வது கிளை வாய்க்காலில் இருந்து கடைமடையை பொதுப்பணி துறையினர் திறந்து வைத்தனர். தொடர்ந்து பருக்கன்மடை, 7, 8வது கிளை கால்வாய் மடைகள், கிளை மடைகளும் திறந்து வைக்கப்பட்டன. வைகை அணையில் இருந்து தொடர்ந்து 120 நாட்களுக்கு தினமும் 900 கனஅடி வீதம் திறக்கப்படும் தண்ணீர் கள்ளந்திரி கால்வாய்க்கு வந்த சேரும்.

இதனால் கள்ளந்திரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். பெரியாறு பிரதான கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி கள்ளந்திரி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை மும்முரமாக துவங்கி உள்ளனர்.

The post வைகை தண்ணீர் கள்ளந்திரி வந்தது appeared first on Dinakaran.

Related Stories: