உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா பயிற்சி

ஜெயங்கொண்டம், ஜூலை 5: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை ஈஷா மையம் சார்பில் மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியை முனைவர் முல்லைக்கொடி தலைமை வகித்தார். யோகா பயிற்சியை ஈஷா மைய பேராசிரியை பிரியா தொடங்கி வைத்து உடல், மனம், ஆன்மா நலம்பெற, யேகா வணக்கம், மூச்சு பயிற்சி, சாம்பவி பயிற்சி அளித்தார். மேலும் உடல் ஆரோக்கியம், ஞாபகசக்தி அதிகரித்து மாணவிகள் கல்வியில் அதிக மதிப்பெண் எடுக்க வழிவகுக்கும். மாணவிகள் ஒவ்வொரு நாளும் நேரத்தை ஒதுக்கி செய்ய வேண்டும் எனக் கூறினார். மேலும் நிகழ்வில் ஈஷா மைய பொறுப்பாளர்கள் விஜயராகவன், சீத்தாராமன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் இங்கர்சால், சாந்தி, மஞ்சுளா, தமிழரசி, மரகதம், கனிமொழி, பாவை.செ.சங்கர், தமிழாசிரியர் ராமலிங்கம், காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா நன்றி கூறினார்.

The post உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: