சாலைகளில் திறந்த நிலையில் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்ல கூடாது

கரூர், ஜூலை 3: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிச் சாலைகளின் வழியாக திறந்த நிலையில் கட்டுமான பொருட்கள் ஏற்றிச் செல்லும் நிகழ்வுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் தனியார் சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக அத்தியாவசிய பொருட்களான மணல், செங்கல், பி.சான்ட், ஜல்லிக்கற்கள் போன்றவை லாரிகளில் ஏற்றப்பட்டு மாநகர சாலைகளின் வழியாக பணிகள் நடைபெறும் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.சுக்காலியூர், தாந்தோணிமலை, ராயனூர், காந்திகிராமம், பசுபதிபாளையம் போன்ற பிரதான பகுதிகளின் வழியாக லாரிகளில் திறந்த நிலையில் கட்டுமான பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுகிறது.

எந்தவித பாதுகாப்பும் இன்றி கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்படும் போது, பின்னால் வரும் வாகன ஓட்டிகள் இதன் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கண்களில் தூசி படர்ந்து சிறு விபத்துக்கள் நடைபெறுவதற்கும் இந்த நிகழ்வு காரணமாக அமைந்து வருகிறது.எனவே, மாநகர பகுதிகளில் கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்லும் போது, பாதுகாப்புடன் செல்ல தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

The post சாலைகளில் திறந்த நிலையில் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்ல கூடாது appeared first on Dinakaran.

Related Stories: