சுதந்திர தினத்தில் தமிழக அரசு விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

 

திருப்பூர், ஜூலை 3: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினவிழா அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற சுதந்திர தினத்தன்று இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் தமிழக முதலமைச்சரால் வழங்கப்படுகிறது. எனவே தகுதியான நபர்களிடம் இருந்து வருகிற 5-ம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்னும் வலைதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு, 10 கிராம் தங்கப்பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு, 10 கிராம் தங்கம், சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு, 10 கிராம் தங்கம், சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளருக்கு, 10 கிராம் தங்கம், சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு, 10 கிராம் தங்கம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். எனவே இதனை தகுதியானவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post சுதந்திர தினத்தில் தமிழக அரசு விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: