டி.கல்லுப்பட்டி காடனேரியில் காரீப் பருவ விவசாயிகளுக்கு பயிற்சி

பேரையூர், ஜூலை 3: டி.கல்லுப்பட்டி அருகே காடனேரி கிராமத்தில் வட்டார காரீப் பருவ விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் விமலா தலைமை வகித்தார். தொழில்நுட்ப வல்லுனர் கோகுலக்கண்ணன் முன்னிலை வகித்தார். பயிற்சியில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலுள்ள இடைப்பட்ட காரீப் பருவ காலத்தில் என்ன பயிர்களை பயிரிடலாம் என்பது குறித்த ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து வேளாண்மையில் கலைஞர் திட்டம் குறித்தும், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் குறித்தும், வேளாண்மை துறையின் மானிய திட்டங்கள் குறித்தும், காரீப் பருவத்திற்கு ஏற்ற பயிர் ரகங்கள் தேர்வு, விதை மற்றும் நேர்த்தி பற்றிய அவசியம் குறித்தும், சூடோமோனஸ் கொண்டு விதை நேர்த்தி உள்ளிட்ட விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

மேலும் விவசாயிகள் இடுபொருட்கள் வாங்கி பயன் பெறவும், உரக்கலவைகள் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. இதில் உதவி வேளாண்மை அலுவலர் மலர்கொடி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மாரிமுத்து, ஜெகன்பாண்டி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஹேமலதா மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post டி.கல்லுப்பட்டி காடனேரியில் காரீப் பருவ விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: