தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் 1000க்கு 9 என்ற அளவில் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், தாய் மற்றும் சிசு பற்றிய தகவல்களை மாநில சுகாதாரத் தகவல் மேலாண்மை அமைப்பு பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில் இந்திய சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு 2020ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் படி, தமிழகத்தைப் பொறுத்தவரை குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 13 குழந்தைகள் என்ற நிலையில் இருந்து தற்போது அது 9 ஆக குறைந்து உள்ளது.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கும். தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் முயற்சியே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அத்துடன் தாய் இறப்பும் குறைந்துள்ளது. தமிழகத்தில் சில மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைக்கு சவால் விடும் வகையில் உள்ளது, இதனால் 70 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: