நத்தம் அருகே சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்த சரக்கு வேன்

நத்தம், ஜூலை 2: நத்தம் அருகே சரக்கு வேன் சாலை தடுப்பு மீது மோதி கவிழ்ந்ததில் டிரைவர் காயமடைந்தார். மதுரை ஏர்போட் நகரை சேர்ந்தவர் திருமுருகன் (35). சரக்கு வாகன ஓட்டுநர். இவர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்டு டெலிவரி செய்ய வேண்டிய பொருட்களை சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி வந்துகொண்டிருந்தார்.

குட்டூர் பிரிவு அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலை நடுவில் உள்ள தடுப்பின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் திருமுருகன் தலையில் சிறிய காயத்துடன் தப்பினார். அவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சரக்கு வேன் விபத்து தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

The post நத்தம் அருகே சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்த சரக்கு வேன் appeared first on Dinakaran.

Related Stories: