குற்றங்கள் நிகழ்ந்தால் உடனே அழைக்கவும் போலீசார் ஆலோசனை

திருவாடானை, ஜூலை 4: சைபர் கிரைம் குற்றங்கள் நிகழ்ந்தால் இலவச தொலைபேசி எண் 1930க்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என போலீசார் ஆலோசனை வழங்கி உள்ளனர். திருவாடானை பாரூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் உத்தரவின் பேரில், திருவாடானை டிஎஸ்பி நிரேஷ் அறிவுறுத்தலின்படி பொதுமக்களிடையே குற்றங்கள் தடுப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் பேசுகையில், பெண் குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் முன்பாக பெற்றோர்கள் சண்டையிடுதல் குழந்தைகளுக்கு தெரியும்படி எந்த கெட்ட விஷயங்களையும் செய்யக்கூடாது.

வளர்ந்த பெண் பிள்ளைகளை மிகவும் கண்காணித்து வரவேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு இரண்டு சக்கர வாகனத்தை இப்பவே வாங்கி கொடுக்காதீர்கள். பிள்ளைகளின் கண்காணிப்பில் கவனம் செலுத்த தவறாதீர்கள். மேலும் சைபர் கிரைம் போன்ற குற்றங்கள் நிகழ்ந்தால் இலவச எண் 1930 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக செல்லுங்கள். நம்ம ஊரு தானே என்று நினைத்து அசாதாரணமாக சாலையை கடக்காதீர்கள்.

தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு அதெல்லாம் தெரியாது. அவர்கள் சீரான வேகத்தில் தான் வருவார்கள். எனவே நாம் தான் சாலையில் செல்லும் போதும், கடக்கும் போதும் கவனமாக சென்றால் விபத்துக்களை தவிக்கலாம் என்று கூறினார். செல்போனில் தெரியாத நபர்களிடம் பேசுவதையோ, தங்களது படங்களை பகிரவோ கூடாது. இதனால் உங்களுக்கே ஆபத்தாக அமைந்துவிடும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வில் சார்பு ஆய்வாளர் கோவிந்தன், முருகன், காவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குற்றங்கள் நிகழ்ந்தால் உடனே அழைக்கவும் போலீசார் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: