திருப்பூரில் மையப்பகுதியில் செயல்படும் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்

உடுமலை, ஜூலை 4: உடுமலை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில், பெதப்பம்பட்டியில் கால்நடை சிகிச்சை வளாகம் உள்ளது. இங்கு செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி என்ற சுழல் நிதித் திட்டத்தை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சிகிச்சையியல் இயக்குநர் டி.சத்தியமூர்த்தி, கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமாரவேல் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

இத்திட்டத்தின் மூலம் வெறிநோய் தடுப்பூசி, டிஎச்பிபிஐஎல் தடுப்பூசி மற்றும் பூனைகளுக்கான தடுப்பூசிகள் மானிய கட்டண முறையில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை போடப்படும். விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரை போடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கால்நடை சிகிச்சை தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு பற்றிய மென்பொருள் பயன்பாட்டுக்காக துவங்கி வைக்கப்பட்டது. இதனை செல்லப்பிராணிகள் வளர்ப்போர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

The post திருப்பூரில் மையப்பகுதியில் செயல்படும் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: