புறவழிச்சாலை அமைக்கக்கோரி ஒன்றிய அமைச்சரிடம் தேனி எம்பி மனு

கம்பம் ஜூலை 4: தேனி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கக்கோரி தேனி எம்பி தங்கதமிழ்ச்செல்வன் மனு அளித்துள்ளார். தேனி தொகுதியின் எம்பியாக தங்கதமிழ்ச்செல்வன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து தங்க தமிழ்ச்செல்வன் தனது தேர்தல் வாக்குறுதியில் தேனி, போடி, ஆண்டிபட்டி மற்றும் உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளாக உள்ளதால் புறவழிச்சாலை அமைப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி, ஒன்றிய சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை தேனி எம்பி தங்கத்தமிழ்செல்வன் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

The post புறவழிச்சாலை அமைக்கக்கோரி ஒன்றிய அமைச்சரிடம் தேனி எம்பி மனு appeared first on Dinakaran.

Related Stories: