உத்தரபிரதேச மாநில தோல்விக்கு மோடி, யோகியை குறை சொல்லாதீங்க!: அகங்காரம் கூடாது என மாஜி முதல்வர் அறிவுரை

குவாலியர்: உத்தரபிரதேச மாநில தோல்விக்கு மோடி, யோகியை குறை சொல்ல வேண்டாம் என்றும், நமக்கு அகங்காரம் கூடாது என மாஜி முதல்வர் அறிவுரை வழங்கி உள்ளார்.பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான உமா பாரதி, குவாலியரில் அளித்த பேட்டியில், ‘நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக மோசமான தோல்வியை சந்தித்தது. கட்சியின் தோல்விக்கு பிரதமர் மோடியையும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் குறை சொல்வது சரியல்ல; 80 தொகுதிகளில் 33 இடங்கள் மட்டுமே பாஜகவுக்கு கிடைத்தது.

அயோத்தி ராமர் கோயிலை நாங்கள் தேர்தலுடன் இணைக்கவில்லை. அதேபோல் மதுரா, காசி தொடர்பான சர்ச்சைகளை தேர்தல் அரசியலுடன் தொடர்புபடுத்தவில்லை. சமூக அமைப்பை மதத்துடன் இணைக்காத சமூகத்தின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் மதத்தை காட்டிலும், சமூக அமைப்பின்படி வாக்களிக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்தல் முடிவுகள், அயோத்தி ராமர் மீதான பக்தி குறைந்துவிட்டதாக அர்த்தமில்லை.

ஒவ்வொரு ராம பக்தரும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்ற அகங்காரம் நமக்கு இருக்கக் கூடாது. அதேநேரம் நமக்கு வாக்களிக்காதவர்கள் ராம பக்தன் இல்லை என்றும் நினைக்கக் கூடாது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் கூட்டணி அமைத்து ஒன்றியத்தில் ஆட்சியை நடத்துவது ஒன்றும் கடினம் அல்ல; ஏனெனில் கடந்த காலங்களில் அவர்களுடன் பாஜக கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்தியது’ என்றார்.

The post உத்தரபிரதேச மாநில தோல்விக்கு மோடி, யோகியை குறை சொல்லாதீங்க!: அகங்காரம் கூடாது என மாஜி முதல்வர் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: