ஐக்கிய ஜனதா தளத்தின் செயல்தலைவராக சஞ்ஜய் ஜா நியமனம்


புதுடெல்லி: ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவராக மாநிலங்களவை எம்பி சஞ்சய் ஜா நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. பீகார் முதல்வரும் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சியின் அனைத்து எம்பிக்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவராக மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ஜாவை நியமிப்பது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் பீகாருக்கு தனி அந்தஸ்து வழங்க வேண்டும் மற்றும் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

The post ஐக்கிய ஜனதா தளத்தின் செயல்தலைவராக சஞ்ஜய் ஜா நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: