தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கவர்னருடன் சந்திப்பு

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது மனு அளித்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர் பிரேமலதா அளித்த பேட்டி:கள்ளச்சாராயம் வரக்கூடாது என்பதற்காகத்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அப்படி இருக்கும்போது கள்ளச்சாராயம் மீண்டும் ஏன் வருகிறது? இதற்கு யார் துணை போகிறார்கள்? ஆட்சியாளர்கள், அதிகாரிகள், காவல்துறை துணையில்லாமல் நிச்சயமாக கள்ளச்சாராயம் காய்ச்ச முடியாது. ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது, விற்கப்படுகிறது என்று கள்ளக்குறிச்சி மக்கள் சொல்கிறார்கள்.
மக்களின் வறுமையை பயன்படுத்தி கள்ளச் சாராயம் போன்ற போதை வஸ்துகளை விற்று தமிழகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளனர். இதுகுறித்து தான் ஆளுநரிடம் முறையிட்டுள்ளோம். ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அந்த மனுவில் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். மதுபான ஆலைகளை மூட வேண்டும். சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும்.
நாங்கள் சொன்னதை ஆளுநர் மிக கவனமாக கேட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.

The post தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கவர்னருடன் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: