டேட்டிங் ஆப் மூலம் உல்லாசத்திற்கு சென்ற இடத்தில் சினிமா சவுண்ட் இன்ஜினியரை நிர்வாணமாக்கி இளம்பெண்ணுடன் வீடியோ எடுத்து மிரட்டல்: ஜிபே மூலம் ரூ27 ஆயிரம், பைக் பறித்த 4 பேர் கைது

வளசரவாக்கம்: சென்னை கே.ேக.நகர் ராஜமன்னார் சாலையை சேர்ந்தவர் சுரேஷ் (56). சினிமா துறையில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் உல்லாசத்திற்கு செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் டேட்டிங் ஆப் மூலம் பழக்கமான ஆண் நண்பர், அழைப்பை ஏற்று கடந்த 15ம் ேததி வடபழனி முருகன் கோயில் அருகே சென்றுள்ளார். பிறகு தனது நண்பரை சந்தித்துள்ளார். அப்போது, இளம்பெண் ஒருவர் எனது வீட்டில் இருப்பதாக அந்த ஆண் நண்பர் கூறியுள்ளார். அதை கேட்டு சுரேஷ் அவருடன் சென்றுள்ளார்.

வடபழனி மாதா தெருவில் உள்ள ஆண் நண்பர் வீட்டிற்கு சென்றதும், வீட்டில் இருந்து 2 இளம்பெண்கள் உள்பட 7 பேர் சுரேஷை மிரட்டி கட்டிப்போட்டு, அவரிடம் இருந்து ₹27 ஆயிரம் பணத்தை ஜிபே மூலம் பறித்துள்ளனர். அதோடு இல்லாமல் 2 நாட்களாக அவரை நிர்வாணப்படுத்தி பல கோணங்களில் இளம்பெண்ணுடன் இருப்பது போல் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அவரிடம் இருந்து விலை உயர்ந்த பைக்கையும் பறித்துள்ளனர். இதுகுறித்து வெளியே சொன்னால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளிவிட்டு விடுவோம் என்று மிரட்டி எச்சரித்து 2 நாட்களுக்கு பிறகு அனுப்பியுள்ளனர்.

இதனால், அச்சமடைந்த சுரேஷ் தனக்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். அதேநேரம், இதுபோன்ற மற்றொரு சம்பவத்தில் வடபழனி போலீசார் சிலரை கைது ெசய்தனர். இதுகுறித்த செய்தியை பார்த்த சுரேஷ், நேற்று முன்தினம் தனக்கு நடந்த சம்பவம் பற்றி வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.வடபழனி போலீசார் விசாரணை நடத்தியபோது, தஞ்சை பகுதியை சேர்ந்த மாதவன் என்பவர் தனது நண்பர்களான இம்ரான், பரத்குமார், இம்மானுவேல், ஷாம், தமிம் அன்சாரி மற்றும் 2 இளம்பெண்களுடன் சேர்ந்து சினிமா சவுண்ட் இன்ஜினியரை 2 நாள் வீட்டு சிறையில் வைத்து பணம் பறித்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து, போலீசார் மாதவன் உள்பட 7 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து முக்கிய குற்றவாளியான தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்த மாதவன் (21), வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த இம்ரான் (எ) லோகு (20), பரத்குமார் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post டேட்டிங் ஆப் மூலம் உல்லாசத்திற்கு சென்ற இடத்தில் சினிமா சவுண்ட் இன்ஜினியரை நிர்வாணமாக்கி இளம்பெண்ணுடன் வீடியோ எடுத்து மிரட்டல்: ஜிபே மூலம் ரூ27 ஆயிரம், பைக் பறித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: