அவதூறுகளை சந்தித்தபோதெல்லாம் வயநாடு மக்களின் அன்பே உறுதுணை.. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உருக்கமான கடிதம்..!!

டெல்லி: அவதூறுகளை சந்தித்தபோதெல்லாம் வயநாடு தொகுதி மக்களின் அளவுகடந்த அன்பே தனக்கு உறுதுணையாக இருந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டு தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்றார். ஆனால் இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டதால் வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து அந்த தொகுதியில் நடைபெறும் தேர்தலில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கும் முன்பாக வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி எம்.பி. உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அவதூறுகளை சந்தித்தபோதெல்லாம் வயநாடு தொகுதி மக்களின் அளவுகடந்த அன்பே தனக்கு உறுதுணையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். உங்கள் குடும்பத்தில் ஒருவன் நான், என்னை ஒருபோதும் நீங்கள் சந்தேகித்ததில்லை என்பதை உணருவேன் என கூறியிருக்கும் ராகுல் காந்தி தன்னை ஆதரித்தது போல் தனது சகோதரியையும் ஆதரிக்க வேண்டும் என வயநாடு மக்களுக்கு எழுதிய உருக்கமான கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post அவதூறுகளை சந்தித்தபோதெல்லாம் வயநாடு மக்களின் அன்பே உறுதுணை.. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உருக்கமான கடிதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: