அரூர், ஜூன் 24: கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கையாக அரூர் அருகே கோட்டப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சேலம் சரக டிஐஜி திடீரென ஆய்வு செய்தார். தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் மாலை சேலம் சரக டிஐஐி ராஜேஸ்வரி திடீரென வந்தார். தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ள வழக்குகள் விபரம் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தார். அப்போது, நீண்டகால வழக்குகளை விரைந்து முடிக்கவும், பழைய குற்றவாளிகளை உடனடியாக பிடித்து, தண்டனை வாங்கி கொடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கடத்தி வருவதை தடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது அரூர் டிஎஸ்பி ஜெகநாதன், இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வருவதை தடுக்கும் வகையில், கோட்டப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட நாய்க்குத்தியில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post கோட்டப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் டிஐஜி திடீர் ஆய்வு appeared first on Dinakaran.